ஐஐடி சென்னை கோடைக்கால பயிற்சி 2026

 

ஐஐடி சென்னை கோடைக்கால பயிற்சி 2026

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் முன்னணியில் இருக்கும் சென்னை ஐஐடி, 2026ஆம் ஆண்டுக்கான கோடைக்கால பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பொறியியல், அறிவியல், மேலாண்மை மற்றும் மனிதவளத் துறைகளில் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த திட்டம் திறக்கப்பட்டுள்ளது.

Indian Institute of Technology Madras (IIT Madras) நடத்தும் இந்த கோடைக்கால பயிற்சி 2026, மே 18ஆம் தேதி தொடங்கி ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும். இந்த காலப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் திட்டப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு பெறுவர்.

இளநிலை பட்டப்படிப்பு படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பில் 3ஆம் அல்லது 4ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள், மேலும் எம்எஸ்சி, எம்சு மற்றும் எம்பிஏ முதலாமாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். விடுதி மற்றும் உணவு வசதிகள் தேவையெனில், குறிப்பிட்ட கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக்கூடிய துறைகள்:

பொறியியல்:
விண்வெளி பொறியியல், பயன்பாட்டு இயக்கவியல் & உயிரி மருத்துவ பொறியியல், பயோடெக்னாலஜி, வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல் & பொறியியல், டேட்டா சயின்ஸ் & AI, பொறியியல் வடிவமைப்பு, மின் பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், மருத்துவ அறிவியல் & தொழில்நுட்பம், உலோகவியல் & பொருட்கள் பொறியியல், கடல் பொறியியல்.

அறிவியல்:
இயற்பியல், வேதியியல், கணிதவியல்.

மனிதவளம் மற்றும் மேலாண்மை:
மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பிப்ரவரி 2 முதல் மார்ச் 2, 2026 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்படுகின்றன.

அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.iitm.ac.in

ஆராய்ச்சி துறையில் ஆர்வமுள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் IIT Chennai போன்ற முன்னணி கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற முடியும். உயர் கல்வி மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கு இது முக்கிய ஆதாரமாக அமையும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் மார்ச் 2, 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, கடைசி தேதியை தவறவிடாமல் கவனமாக செயல்படுவது அவசியம்.

புதியது பழையவை

نموذج الاتصال