கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் NLC இந்தியா நிறுவனத்தில் மருத்துவத் துறையைச் சார்ந்த பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பு 16 பிப்ரவரி 2026 முதல் தொடங்கி 10 மார்ச் 2026 வரை நடைபெறும். மருத்துவம் மற்றும் இணை மருத்துவத் துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காலியிட விவரங்கள்
Pharmacist – 15 பணியிடங்கள்
Opthalmic Technician – 2
Theatre Assistant – 2
Audiologist & Speech Therapist – 1
Dental Mechanic – 1
கல்வித் தகுதி
Pharmacist: B.Pharm பட்டம்
Opthalmic Technician: Optometry இல் பட்டப்படிப்பு
Theatre Assistant: Operation Theatre & Anaesthesia Technology பட்டம்
Audiologist & Speech Therapist: Audiology & Speech-Language Pathology பட்டம்
Dental Mechanic: Dental Lab Technology டிப்ளமோ
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
ஊதிய விவரம்
பணியிடத்தைப் பொறுத்து மாதம் ரூ.20,000 முதல் ரூ.1,00,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
Pharmacist – ரூ.22,000 முதல் ரூ.90,000
Opthalmic Technician – ரூ.23,000 முதல் ரூ.95,000
Theatre Assistant – ரூ.20,000 முதல் ரூ.81,000
Audiologist & Speech Therapist – ரூ.24,000 முதல் ரூ.1,00,000
Dental Mechanic – ரூ.22,000 முதல் ரூ.90,000
தேர்வு நடைமுறை
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் இறுதி தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://www.nlcindia.in
என்ற முகவரியில் சென்று “Careers” பகுதியில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் விவரங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFIACATION: CLICK HERE
முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம்: 16.02.2026
விண்ணப்ப கடைசி தேதி: 10.03.2026
மருத்துவத் துறையில் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு நெய்வேலி NLC-யில் பணியாற்றும் வாய்ப்பு ஒரு முக்கியமான அரசு நிறுவன வேலைவாய்ப்பாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்து, காலக்கெடுவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
