நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத் துறையில் Junior Overman மற்றும் Mining Sirdar பதவிகளுக்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் சுரங்கத் துறையில் தொழில்நுட்ப திறன் கொண்டவர்களுக்கு அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. விண்ணப்ப பதிவு 17 பிப்ரவரி 2026 முதல் தொடங்கி, 18 மார்ச் 2026 வரை நடைபெறும்.
பணியிட விபரம்:
Junior Overman – 3
Mining Sirdar – 5
மொத்தம் – 8
கல்வித் தகுதி:
Junior Overman பதவிக்கு Mining அல்லது Mining Engineering துறையில் டிப்ளமோ தகுதி வேண்டும்.
Mining Sirdar பதவிக்கு Mining Engineering துறையில் டிப்ளமோ அல்லது BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக Mining Sirdar சான்றிதழ் மற்றும் First Aid சான்றிதழ் அவசியம்.
ஊதிய விவரம்:
Junior Overman: மாதம் ரூ.31,000 முதல் ரூ.1,00,000 வரை
Mining Sirdar: மாதம் ரூ.26,000 முதல் ரூ.1,10,000 வரை
வயது வரம்பு:
அதிகபட்சம் 30 வயது (அரசு விதிமுறைகளின்படி தளர்வு பொருந்தும்).
தேர்வு நடைமுறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
Junior Overman: ரூ.595 (SC/ST – ரூ.295)
Mining Sirdar: ரூ.486 (SC/ST – ரூ.236)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.nlcindia.in
சுரங்கத் துறையில் அரசு நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
NLC Junior Overman, Mining Sirdar Important Links
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
