இந்தியாவின் முக்கிய பொது துறை எஃகு நிறுவனமான ஸ்டீல் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான மருத்துவர்களை நேரடியாக தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிலாய் ஸ்டீல் பிளாண்ட் (Bhilai Steel Plant) பிரிவில் Specialist மற்றும் General Duty Medical Officer (GDMO) பதவிகளுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆட்சேர்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது. ஆரம்பமாக ஒரு வருட காலத்திற்கு நியமனம் செய்யப்படுவதுடன், தேவையெனில் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்படும். மருத்துவத் துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
பணியிட விபரம்:
General Medicine (Specialist) – 1
Orthopaedics (Specialist) – 1
General Duty Medical Officer (GDMO) – 14
கல்வித் தகுதி:
Specialist பதவிக்கு MBBS உடன் தொடர்புடைய துறையில் PG Diploma அல்லது PG Degree (MS/MD) அவசியம்.
GDMO பதவிக்கு MBBS தகுதி வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மருத்துவ கவுன்சில் (MCI/NMC/State Medical Council) பதிவுசெய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். செல்லுபடியாகும் மருத்துவர் அனுமதி உரிமம் கட்டாயம். தொடர்புடைய பணியனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதிய விவரம்:
Specialist: ரூ.1,20,000 முதல் ரூ.1,80,000 வரை (பணியிடம் மற்றும் தகுதி அடிப்படையில்)
GDMO: ரூ.90,000 முதல் ரூ.1,00,000 வரை மாதம்
வயது வரம்பு:
26.02.2026 அன்று அதிகபட்ச வயது 69 ஆக இருக்க வேண்டும்.
நேர்காணல் தேதி:
வாக்-இன் நேர்காணல் 26 பிப்ரவரி 2026 அன்று நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Human Resource Development Centre
(பிலாய் ஸ்டீல் பிளாண்ட் மெயின் கேட் அருகில்)
Bhilai – 490001
காலை 09.30 மணி முதல் ஆவணச் சரிபார்ப்பு நடைபெறும். 10.30 மணி முதல் நேர்காணல் தொடங்கும்.
தேர்வு நடைமுறை:
ஆவணச் சரிபார்ப்பு
நேர்காணல்
விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், பதிவு சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை கொண்டு வர வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் கொண்டு வர வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் அறிவிப்பு PDF அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்:
| Notification | Click here |
மருத்துவத் துறையில் அரசு பொது துறையில் பணியாற்ற விரும்பும் அனுபவமுள்ள மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
