தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான UGC NET 2025 (டிசம்பர் செஷன்) தேர்வு கடந்த டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெற்றது. இந்த தேர்வை 85 பாடங்களுக்கு சுமார் 7 லட்சம் தேர்வர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், UGC NET 2025 தேர்விற்கான முடிவுகள் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தங்களது முடிவுகளை https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
🔍 UGC NET 2025 Result – எப்படி பார்க்கலாம்?
படி 1:
👉 https://ugcnet.nta.nic.in/
அல்லது
👉 https://cnr.nic.in/Results26 என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2:
விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பாஸ்வோர்டு / பிறந்த தேதி (DOB) பயன்படுத்தி Login செய்யவும்.
படி 3:
Login செய்தவுடன் தேர்வர் தமது Result & Score Card-ஐ பார்க்கலாம்.
படி 4:
பாடவாரியாக
கட்-ஆஃப் மதிப்பெண்கள்
இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key)
என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
படி 5:
தேர்வர் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தகுதி பெற்றதா இல்லையா என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
📊 UGC NET 2025 Cut-Off மதிப்பெண்கள் – முக்கிய தகவல்
UGC NET தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 வகையான Cut-Off மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும்.
🔹 1️⃣ முதல் Cut-Off
➡️ Ph.D சேர்க்கை தகுதி
🔹 2️⃣ இரண்டாம் Cut-Off
➡️ NET (Assistant Professor) + Ph.D தகுதி
🔹 3️⃣ மூன்றாம் Cut-Off
➡️ JRF + NET + Ph.D (முழு தகுதி)
👉 முதல் Cut-Off பெற்றவர்கள் – Ph.D மட்டும்
👉 இரண்டாம் Cut-Off பெற்றவர்கள் – NET + Ph.D
👉 மூன்றாம் Cut-Off பெற்றவர்கள் – JRF + NET + Ph.D
👉 சமூக வகுப்பு (General / OBC / SC / ST / PwBD) அடிப்படையில் தனித்தனியாக Cut-Off நிர்ணயிக்கப்படுகிறது.
📝 UGC NET தேர்வு – ஒரு பார்வை
📌 ஆண்டுக்கு 2 முறை (ஜூன் & டிசம்பர்) நடைபெறும்
📌 மொத்தம் 85 பாடங்கள்
📌 2 தாள்கள்
Paper 1 – பொதுத்தாள்
Paper 2 – பாடவாரியானது
📌 150 கேள்விகள் | 300 மதிப்பெண்கள்
📌 Negative Mark இல்லை
🧾 டிசம்பர் 2025 தேர்வு – முக்கிய காலக்கட்டங்கள்
🗓 தேர்வு நடைபெற்றது: 31.12.2025 – 07.01.2026
🗓 உத்தேச விடைக்குறிப்பு: 14.01.2026
🗓 ஆட்சேபனை கடைசி நாள்: 17.01.2026
🗓 இறுதி விடைக்குறிப்பு & Result: 04.02.2026
📌 முக்கிய அறிவுரை
தேர்வர்கள் Result PDF & Score Card-ஐ Download செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும்
Cut-Off மதிப்பெண்களை பாடவாரியாக சரிபார்க்கவும்
Ph.D / JRF / Assistant Professor வாய்ப்புகளுக்கு தகுதி பெற்றவர்கள், அடுத்த கட்ட அறிவிப்புகளை கவனிக்கவும்
.png)