சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 2026ஆம் ஆண்டிற்கான Project Assistant பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தகுதி பெற்றவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு முக்கிய வாய்ப்பாகும்.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் ஒரு Project Assistant பதவி நிரப்பப்பட உள்ளது. பணியிடம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும். விண்ணப்பங்கள் 17 பிப்ரவரி 2026 முதல் தொடங்கி 10 மார்ச் 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
பணியிடம் விவரம்:
Project Assistant – 1
கல்வித் தகுதி:
BE/B.Tech அல்லது ME/M.Tech (CSE/IT/ECE/E&I/EEE)
அல்லது BCA / B.Sc / M.Sc (Computer Science) / MCA
கணினி அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
மாதம் ரூ.25,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
தேர்வு நடைமுறை:
எழுத்துத் தேர்வு அல்லது
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
எந்தவித கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சு எடுக்க வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலமும், அதே சமயம் மின்னஞ்சல் மூலமும் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Dr. S. Kirthica
Assistant Professor
Department of Computer Science and Engineering
Anna University
Chennai – 600025
மின்னஞ்சல்:
s.kirthica@annauniv.edu
விண்ணப்பங்கள் 10 மார்ச் 2026க்குள் சென்றடைய வேண்டும்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் பணியாற்ற ஆர்வமுள்ள கணினி துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
