பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 2026ஆம் ஆண்டிற்கான Project Engineer-I பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்கள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு முக்கிய வாய்ப்பாகும். விண்ணப்ப பதிவு 18 பிப்ரவரி 2026 முதல் தொடங்கி 9 மார்ச் 2026 வரை நடைபெறும்.
பணியிடம் விவரம்:
Project Engineer-I – 12
பிரிவு வாரியாக:
UR – 3
OBC – 4
EWS – 1
SC – 3
ST – 1
கல்வித் தகுதி:
Electronics, Electronics & Communication, Electrical, Computer Science, Information Technology போன்ற துறைகளில் B.E/B.Tech அல்லது 4 ஆண்டு B.Sc Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டம் AICTE/UGC அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
01.02.2026 நிலவரப்படி குறைந்தது 2 ஆண்டு தொழில்துறை அனுபவம் அவசியம்.
IT Infrastructure, IP Networking, Data Centre, CCTV, IoT Projects போன்ற துறைகளில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
01.02.2026 நிலவரப்படி அதிகபட்சம் 32 வயது.
OBC – 3 ஆண்டு தளர்வு
SC/ST – 5 ஆண்டு தளர்வு
PwBD – 10 ஆண்டு தளர்வு
ஊதிய விவரம்:
முதல் ஆண்டு – மாதம் ரூ.40,000
ஒவ்வொரு ஆண்டும் ரூ.5,000 உயர்வு (அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை)
ஆண்டுக்கு ரூ.12,000 இன்சூரன்ஸ் மற்றும் பிற அலவன்ஸ்
Retention Bonus – ஆண்டு ரூ.25,000 (4 ஆண்டுகள் முடிவில் மொத்தம் ரூ.1,00,000)
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.400 + 18% GST
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
கட்டணம் SBI Collect மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு நடைமுறை:
கட்டாய ஆன்லைன் பதிவு
எழுத்துத் தேர்வு (85 மதிப்பெண்கள்)
நேர்காணல் (15 மதிப்பெண்கள்)
இறுதி தேர்வு முழுக்க திறமை அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
BEL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள Microsoft Office Form மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்து, தேவையான ஆவணங்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://bel-india.in
அரசு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
BEL Project Engineer I Important Links
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
