HCL சென்னையில் நேரடி நேர்காணல் வேலைவாய்ப்பு

HCL சென்னையில் நேரடி நேர்காணல் வேலைவாய்ப்பு

சென்னையில் ஐடி துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு முன்னணி நிறுவனமான HCL Technologies புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. OTC Collections மற்றும் OTC Dispute Management பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடி நேர்காணல் நடைபெற உள்ளது.

HCL Technologies சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய தேதிகளில் Walk-in Interview நடைபெறுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்படுவர்.

பணியிடங்கள்:

  • OTC Collections

  • OTC Dispute Management / Dispute Resolution

கல்வித் தகுதி:
B.Com அல்லது MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.

OTC Collections பிரிவுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 9 ஆண்டு வரை பணி அனுபவம் அவசியம். OTC – DMS, Dispute Management, Order Management, Accounts Receivable (Purchase Order / Cash Application) போன்ற துறைகளில் அனுபவம் கொண்டவர்கள் முன்னுரிமை பெறுவர்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Customer Care திறன்கள் மற்றும் Voice Collections அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணிநிலை:

  • Night Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

  • இலக்குகளை நிறைவேற்றும் திறன் அவசியம்.

  • குழுவாக (Team Player) செயல்படும் மனப்பாங்கு வேண்டும்.

சம்பள விவரம் நேர்காணல் இறுதி கட்டத்தில் அறிவிக்கப்படும். அனுபவம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.

நேர்காணல் தேதி & நேரம்:
பிப்ரவரி 12 & பிப்ரவரி 14
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

நேர்காணல் இடம்:
HCL Technologies,
Tower 4, No.602/3/138,
Special Economic Zone (Elcot-SEZ),
Medavakkam High Road,
Sholinganallur,
Chennai – 600119.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

கொண்டுசெல்ல வேண்டியவை:

  • புதுப்பிக்கப்பட்ட Resume

  • ஆதார் / PAN / டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று

Finance மற்றும் Accounts துறையில் அனுபவமுள்ள பட்டதாரிகள், குறிப்பாக B.Com மற்றும் MBA (Finance) முடித்தவர்கள் இந்த வாய்ப்பால் பயன் பெறலாம். Night Shift பணிக்கு தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு இது சிறந்த தொடக்கமாக அமையும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம். தேவையான ஆவணங்களுடன் சரியான நேரத்தில் அலுவலகத்தை அணுகுவது அவசியம்.

புதியது பழையவை

نموذج الاتصال