HCL Java Lead Developer வேலைவாய்ப்பு

 

HCL Java Lead Developer வேலைவாய்ப்பு

IT துறையில் அனுபவமுள்ள ஜாவா டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்பை HCL Technologies அறிவித்துள்ளது. Java Lead Developer பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

HCL Technologies நிறுவனத்தில் Java Lead Developer பதவிக்கான நேர்காணல் பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Java 11 அல்லது அதற்கு மேல் பதிப்புகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Domain Driven Design (DDD), 12 Factor Applications, SOLID Principles ஆகியவற்றில் புரிதல் அவசியம். Microservices Architecture மற்றும் Service Orchestration கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

Database திறன்களில் RDBMS மற்றும் NoSQL அனுபவம் தேவை. GraphQL, gRPC, Event Driven Architecture (EDA), SAGA Pattern, Circuit Breaker போன்ற வடிவமைப்பு முறைகள் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

மேலும் Jenkins, GitHub Actions, GitLab CI, Azure DevOps, ArgoCD, Spinnaker போன்ற CI/CD கருவிகளில் அனுபவம் அவசியம். Cloud Platforms தொடர்பாக GCP, Azure அல்லது AWS ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Kafka, Pub/Sub, RabbitMQ போன்ற Messaging Systems அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

அனுபவத் தகுதி:

  • குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சம் 17 ஆண்டு வரை சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.

  • பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமான தொடர்புத் திறன் அவசியம்.

நேர்காணல் முறை:

பணிநியமனம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சம்பள விவரம் இறுதி நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

Senior Java Developers, Microservices மற்றும் Cloud தொழில்நுட்பங்களில் அனுபவமுள்ள IT நிபுணர்கள் இந்த வாய்ப்பின் மூலம் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.

தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் பிப்ரவரி 21ம் தேதிக்கான நேர்காணலுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு நேரம் மற்றும் முகவரி விவரங்கள் தனியாக அனுப்பப்படும்.


புதியது பழையவை

نموذج الاتصال