ஸ்டார்ட்அப்புகளுக்கு IP மேலாண்மை விழிப்புணர்வு

ஸ்டார்ட்அப்புகளுக்கு IP மேலாண்மை விழிப்புணர்வு

புதிய தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அறிவுசார் சொத்து உரிமை (IP) பாதுகாப்பு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, IP மேலாண்மை குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு அமர்வு மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

Tamil Nadu Technology Hub (iTNT Hub) சார்பில் “IP Management Strategies for Startups & Entrepreneurs” என்ற தலைப்பில் இந்த ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த அமர்வு மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பிராண்டுகளை சட்டரீதியாக பாதுகாப்பது எப்படி, பதிப்புரிமை மற்றும் காப்புரிமை நடைமுறைகள் என்ன, வர்த்தக ரகசியங்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன.

பிராந்திய அடிப்படையில் பல தேதிகளில் இந்த அமர்வு நடைபெறுகிறது:

  • பிப்ரவரி 13, 2026 – காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
    (திருச்சி மண்டலம்: திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி)

  • பிப்ரவரி 18, 2026 – காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
    (மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்)

  • பிப்ரவரி 13, 2026 – காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
    (கோயம்புத்தூர் மண்டலம்: கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி)

இந்த அமர்வு ஸ்டார்ட்அப்புகள் தங்களது தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் IP பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோர், புதுமை நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இன்க்யூபேட்டர்கள் இந்த அமர்வின் மூலம் பயன் பெறலாம். குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் ஈடுபடும் ஸ்டார்ட்அப்புகளுக்கு இது அவசியமான வழிகாட்டலாக இருக்கும்.

IP பாதுகாப்பு தொடர்பான தெளிவான புரிதல், ஒரு ஸ்டார்ட்அப்பின் நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து அமர்வில் பங்கேற்கலாம்.

பதிவு செய்ய:
https://www.itnthub.tn.gov.in

புதியது பழையவை

نموذج الاتصال