மதுரையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 5,000 வேலை வாய்ப்புகள்
மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மிகப்பெரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28.02.2026 (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது.
📍 இடம்: ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கோரிப்பாளையம், மதுரை
இந்த முகாமில் 5,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
எந்த துறைகளில் வேலை?
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல துறைகளில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன:
தகவல் தொழில்நுட்பம் (IT Jobs)
வாகன உற்பத்தி
வங்கித் துறை & நிதிசேவைகள்
காப்பீட்டு துறை
ஜவுளி & சில்லறை வணிகம்
மருத்துவம்
உணவு உற்பத்தி
மேலும் 20-க்கும் மேற்பட்ட துறைகள்.
எப்படி பதிவு செய்வது?
வேலை நாடுநர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்:
பதிவு செய்த பின்:
கல்விச்சான்றிதழ்களின் நகல்
Bio-Data / Resume
உடன் முகாமிற்கு வர வேண்டும்.
✅ பங்கேற்பு கட்டணம் இல்லை
கூடுதல் நன்மைகள்
TNPSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி பதிவு
திறன் மேம்பாட்டு (Skill Training) திட்ட பதிவு
அரசு சான்றிதழுடன் பயிற்சி
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம்
உதவித்தொகைக்கு தகுதி:
குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்
இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு
பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பள்ளி முடித்தவர்கள் வரை தங்களுக்கான வேலை வாய்ப்புகளை நேரடியாக நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ள இந்த முகாம் உதவும்.
மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
