போஸ்ட் ஆபிஸ் MIS: மாதம் ₹5,550 வருமானம்

 

போஸ்ட் ஆபிஸ் MIS: மாதம் ₹5,550 வருமானம்

பணவீக்கம் அதிகரித்து வரும் காலத்தில், பாதுகாப்பான முதலீடு என்பது பலருக்கும் முக்கிய தேவையாகியுள்ளது. குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நிலையான மாதாந்திர வருமானம் தேவைப்படுபவர்கள், குறைந்த ஆபத்துடன் நம்பகமான திட்டங்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS) பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

India Post வழங்கும் Post Office Monthly Income Scheme (POMIS) என்பது ஒருமுறை முதலீடு செய்து, அதன் மீது மாதந்தோறும் வட்டி வருமானம் பெறும் திட்டமாகும். இந்தத் திட்டம் மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுவதால் முதலீட்டுத் தொகைக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டு வட்டியை கணக்கிட்டு, அதை 12 மாதங்களாக பிரித்து ஒவ்வொரு மாதமும் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதி மற்றும் முதலீட்டு வரம்பு:

  • இந்திய குடிமகன் 18 வயது நிரம்பியவர் சேரலாம்.

  • தனிநபர் கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

  • கூட்டு கணக்கில் (மூன்று பேர் வரை) ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் சுமார் ரூ.5,550 வரை வட்டி வருமானம் கிடைக்கும். கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் சுமார் ரூ.9,250 வரை மாதாந்திர வருமானம் பெற முடியும்.

முதிர்வு காலம்:
இந்தத் திட்டத்தின் கால அவதி 5 ஆண்டுகள். காலம் நிறைவடைந்ததும் முதலீட்டுத் தொகை முழுவதும் திருப்பி வழங்கப்படும். அவசர காரணங்களால் முன்கூட்டியே கணக்கை மூட விரும்பினால், ஒரு வருடத்திற்குப் பிறகு அபராதம் விதிக்கப்பட்டு மூட அனுமதி உண்டு.

கணக்கு தொடங்குவது எப்படி?

  • முதலில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

  • அருகிலுள்ள தபால் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

  • தேவையான ஆவணங்களுடன் முதலீட்டுத் தொகையை செலுத்தி கணக்கைத் தொடங்கலாம்.

ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாதந்தோறும் நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள் இந்தத் திட்டத்தால் அதிகம் பயன் பெறலாம். ஓய்வூதியத் தொகையை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதன் மீது கிடைக்கும் வட்டியை வாழ்வாதார செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

குறைந்த ஆபத்து மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் மாதாந்திர வருமானம் பெற விரும்புவோர் POMIS திட்டத்தை பரிசீலிக்கலாம். அருகிலுள்ள தபால் நிலையத்தில் சென்று விரிவான தகவல்களைப் பெற்று, தேவையான ஆவணங்களுடன் முதலீட்டைத் தொடங்குவது சிறந்த நடைமுறையாகும்.

புதியது பழையவை

نموذج الاتصال