ரயில்வே துறையில் Group-D பணியை இலக்காகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு முக்கிய உதவியாக, மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. போட்டித் தேர்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு கட்டணமின்றி வழிகாட்டுதல் வழங்கும் இந்த முயற்சி பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், RRB Group-D போட்டித் தேர்வுக்கான திட்டமிட்ட பயிற்சியை அறிவித்துள்ளது. அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் நடத்தப்படும் இந்த வகுப்புகளில் பாடத்திட்ட விளக்கம், மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் தேர்வு உத்திகள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.
இந்த மையம் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதலுடன், உளவியல் பகுப்பாய்வு சோதனைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி ஆலோசனை, கல்வி தொலைக்காட்சி வழியாக பயிற்சி வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறது.
தற்போது RRB Group-D தேர்வுக்கான நேரடி பயிற்சி 11.02.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
பாடவாரியான துணைத் தேர்வுகள் மற்றும் முழுமையான மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்களின் திறனை மதிப்பீடு செய்து, மேம்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
RRB Group-D தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வில் முதன்முறையாக பங்கேற்க உள்ளவர்கள் இந்த இலவச பயிற்சியால் அதிகம் பயன் பெறுவார்கள். பொருளாதார சிக்கல்கள் காரணமாக தனியார் பயிற்சி மையங்களில் சேர முடியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.
முகவரி:
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி,
சென்னை – 600032.
தொடர்பு எண்கள்:
044-22500134
9361566648
போட்டித் தேர்வில் வெற்றி பெற முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.png)