தொழில்முனைவு தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சென்னை நகரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தொழில் தொடங்குவது எப்படி, முதலீட்டை திட்டமிடுவது, வணிக யோசனையை நடைமுறைப்படுத்துவது, அரசு உதவித்திட்டங்களை பயன்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் எடுத்துரைக்கப்பட உள்ளன.
தொழில்முனைவு குறித்த அடிப்படை அறிவை பெற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி யாருக்கு பயன்படும்?
-
சிறு தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள்
-
சுயதொழில் வாய்ப்பு தேடும் பெண்கள்
-
புதிய வணிக யோசனை கொண்டவர்கள்
-
அரசு திட்டங்கள் மூலம் உதவி பெற விரும்புவோர்
பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். ஆர்வமுள்ளவர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
தொடர்பு விவரம்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
சிட்கோ தொழிற்பேட்டை,
இடிஐஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600032
தொலைபேசி: 8668102600 / 8754495254
தொழில்முனைவு துறையில் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த ஐந்து நாள் பயிற்சி ஒரு நல்ல தொடக்கமாக அமையும். தகுதியுள்ளவர்கள் முன்பதிவு செய்து பயனடையலாம்.
.png)