CSC 252 ஆதார் Supervisor வேலைகள் – 10.03.2026 வரை விண்ணப்பம்

 

CSC 252 ஆதார் Supervisor வேலைகள் – 10.03.2026 வரை விண்ணப்பம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் CSC e-Governance Services India Ltd நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான ஆதார் Supervisor / Operator பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 252 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (1 ஆண்டு) வழங்கப்படுகின்றன. விண்ணப்ப பதிவு 11 பிப்ரவரி 2026 முதல் தொடங்கியுள்ளது. 10 மார்ச் 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பணியிடம் விவரம்

பதவி: Aadhaar Supervisor / Operator
மொத்த காலியிடங்கள்: 252
பணி இடம்: இந்தியா முழுவதும் (மாவட்ட வாரியாக)
பணி வகை: ஒப்பந்தம் (1 ஆண்டு)


கல்வித் தகுதி

பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்:

  • 12ஆம் வகுப்பு தேர்ச்சி

  • 10ம் வகுப்பு + 2 ஆண்டு ITI

  • 10ம் வகுப்பு + 3 ஆண்டு பாலிடெக்னிக் டிப்ளமோ

கட்டாய சான்றிதழ்:
UIDAI அங்கீகரித்த Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor சான்றிதழ் அவசியம்.


பிற தகுதிகள்

  • அடிப்படை கணினி அறிவு

  • நல்ல தொடர்புத்திறன்

  • சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை


வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.


ஊதியம்

சம்பந்தப்பட்ட மாநில அரசின் Semi-Skilled பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு நடைமுறை

  • விண்ணப்ப பரிசீலனை

  • ஆவண சரிபார்ப்பு

  • தேவையெனில் நேர்முகம்

  • இறுதி தேர்வு செய்து Aadhaar Seva Kendra-வில் பணியமர்த்தல்


எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பம் முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ தளம்:
https://career.csccloud.in

அல்லது
https://csc.gov.in

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து, “Aadhaar Supervisor/Operator” பணியைத் தேர்வு செய்து, தேவையான விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், Aadhaar Supervisor/Operator சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Important Links

Link NameURL
Apply Online / View JobClick here
Official PDFClick here
CSC Official Websitehttps://csc.gov.in
CSC Job Portalhttps://csc.gov.in/ask

முக்கிய தேதி

  • விண்ணப்ப தொடக்கம் – 11.02.2026

  • விண்ணப்ப கடைசி தேதி – 10.03.2026


Aadhaar சேவை மையங்களில் பணியாற்ற விரும்பும் 12ம் வகுப்பு / ITI / டிப்ளமோ தகுதி பெற்ற இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. காலக்கெடுவிற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

புதியது பழையவை

نموذج الاتصال