திருச்சி DCPU ஆற்றுப்படுத்துநர் வேலை – ₹18,536

 

திருச்சி DCPU ஆற்றுப்படுத்துநர் வேலை – ₹18,536

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் (Mission Vatsalya) கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் (DCPU) ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

இந்தப் பணிக்கான மாத தொகுப்பூதியம் ரூ.18,536 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் மட்டுமே உள்ளதால் தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:

  • சமூகப்பணி / சமூகவியல் / உளவியல் / பொது நலம் / ஆற்றுப்படுத்துதல் துறைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3)

  • Counselling and Communication துறையில் முதுகலை பட்டயப்படிப்பு (PG Diploma)

  • அரசு அல்லது தொண்டு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம்

  • கணினி இயக்கத் திறன்

வயது வரம்பு

31.01.2026 நிலவரப்படி 42 வயதை மீறக்கூடாது.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

  • கல்விச் சான்றிதழ்களின் சுயசான்றொப்ப நகல்

  • பணி அனுபவச் சான்றிதழ்களின் சுயசான்றொப்ப நகல்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்:

https://tiruchirappalli.nic.in/

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.02.2026 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
N.E.1, முதல் தளம்
மெக்டொனால்டு ரோடு
கலையரங்கம் வளாகம்
திருச்சிராப்பள்ளி – 620001

தொடர்புக்கு

மேலும் விவரங்களுக்கு: 0431-2413055


பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் சமூகப் பணியில் ஈடுபட விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

புதியது பழையவை

نموذج الاتصال