தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் 2026ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகளுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3,50,000 வரை நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகை மூன்று தவணைகளில் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
திட்டத்தின் நோக்கம்
குடிசை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் வழங்கி, 2030க்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
குடிசை வீடுகளில் வசிப்பவர்கள்
சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள்
குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் கொண்டவர்கள்
யாருக்கு தகுதி இல்லை?
ஏற்கனவே கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள்
குடிசையில் பகுதி கான்கிரீட்/ஓடு/அஸ்பெஸ்டாஸ் கூரை இருந்தால்
புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள்
தேவையான ஆவணங்கள்
நிலப்பத்திரம்
பட்டா, சிட்டா
ரேஷன் அட்டை
ஆதார் அட்டை
வருமானச் சான்றிதழ்
வங்கி கணக்கு விவரம்
முகவரி சான்று
புகைப்படம்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் குழுவினர் விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள்.
கிராம சபை ஒப்புதல் பெற்ற பின்னரே இறுதி பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும்.
முக்கிய அதிகாரப்பூர்வ இணைப்புகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை:
https://www.tnrd.tn.gov.in
தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ தளம்:
https://www.tn.gov.in
TANCEM (சிமெண்ட் விநியோகம் தொடர்பான தகவல்):
https://www.tancem.com
கூடுதல் விவரங்களுக்கு தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகலாம்.
