TNPSC Group 4: இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு – பிப்.24, 25 சென்னையில் நடைபெறும்

 

TNPSC Group 4: இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு – பிப்.24, 25 சென்னையில் நடைபெறும்

தமிழக அரசின் பெரும்பாலான அரசுப் பணியிடங்களை நிரப்பும் முக்கிய அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், TNPSC Group 4 தேர்வு தொடர்பாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குரூப் 4 இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

TNPSC Group 4 – தேர்வு விவரம்

குரூப் 4 தேர்வின் மூலம்,

  • விஏஓ

  • இளநிலை உதவியாளர்

  • தட்டச்சர்

  • சுருக்கெழுத்து தட்டச்சர்

  • கள ஆய்வாளர்

  • வரைவாளர்

  • தொகுப்பு உதவியாளர்

  • வனக்காப்பாளர்

  • நேர்முக உதவியாளர்

உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வருவாய், நகராட்சி நிர்வாகம், வனத்துறை மற்றும் பிற அரசுத் துறைகளில் நிரப்பப்படுகின்றன.

10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் இந்த தேர்வை எழுதலாம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

2025 Group 4 தேர்வு நிலவரம்

2025 ஆம் ஆண்டிற்கான TNPSC Group 4 தேர்வு கடந்த ஜூலை 12, 2025 அன்று நடைபெற்றது.
இந்த தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இதற்கான தேர்வு முடிவுகள் 22.10.2025 அன்று வெளியிடப்பட்டன.

முதல் கட்ட கலந்தாய்வில் கட்-ஆஃப் அடிப்படையில் சிலர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

TNPSC Group 4 – இரண்டாம் கட்ட கலந்தாய்வு

முதல் கட்ட கலந்தாய்வின் பின்னர் மீதமுள்ள பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் தேதிகள்:
📅 24.02.2026 & 25.02.2026

நடைபெறும் இடம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்,
எண்.3, தேர்வாணையச் சாலை,
(பிராட்வே பேருந்து நிலையம் & கோட்டை ரயில் நிலையம் அருகில்),
சென்னை – 600 003.

இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்கள்

  • கலந்தாய்வுக்கான நாள், நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அழைப்பாணை இணையதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  • அஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்பப்படாது.

  • கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் SMS மற்றும் Email மூலமாக மட்டும் அனுப்பப்படும்.

  • இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி இல்லை.

  • குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது.

தேர்வர்களுக்கு அறிவுரை

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள்,

  • மூலச் சான்றிதழ்களை முழுமையாக தயார் செய்து

  • அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே

  • தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

புதியது பழையவை

نموذج الاتصال